இவருக்கு பதிலாக இனி வோறொருவர் வருவார் – இன்னொரு அதிரடி முடிவை எடுத்த கங்குலி!
தேர்வுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து இவர் விரைவில் நீக்கப்பட்டு மாற்று நபரை நியமிக்க உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து வரும் எம்எஸ்கே பிரசாத் உள்பட ஐந்து பேர் தேர்வுக் குழுவில் உள்ளனர். இந்த குழுவில் தலைவர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது.

தேவங் காந்தி, ஜத்தின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகிய மூவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருக்கிறது. ஆதலால், இவர்களை நீக்கி புதிய குழுவினை அமைக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை.
முன்னதாக, ஒட்டுமொத்தமாக தேர்வுக் குழுவில் இருக்கும் தலைவர் உட்பட அனைவரும் நீக்கப்பட்டு புதிதான தேர்வுக்குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது பதவிக்காலம் முடிவடையும் எம்எஸ்கே பிரசாத், ககன்கோடா ஆகிய இருவருக்கு மட்டுமே மாற்று நபர்கள் நியமிக்கப்படுவர் என கங்குலி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஆலோசனைக்குழு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். குழுவில் இடம் பெறும் வீரர்கள் பெயரை அறிவிக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அதற்கான வீரர்களை அணுகும்போது அவர்கள் முடிவை தெரிவிக்க ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் கேட்பார்கள். இதுகுறித்து நாங்கள் விரைவில் அறிவிப்போம்’’ என்றார்.