கொரோனா வைரஸை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை வீரர்கள் கையில் கட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி!
கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடர் 6 மாத காலம் தள்ளி வைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் உயிர் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு, அதற்குள்ளாகதான் போட்டி நடைபெறும்.
உயர்பாதுகாப்பு வளையம் என்பது ஒரு மிகப்பெரிய கெடுபிடிகள் விதிமுறைகள் கொண்ட ஒரு வளையமாக இருந்து விட்டால் ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு நபரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விட்டால் 12 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.6 நாட்கள் தனி அறையிலும் மீதமிருக்கும் ஆறு நாட்கள் தனி ஹோட்டலிலும் இருக்க வேண்டும். இதனை விட்டு வெளியே வரக்கூடாது.
அதனை தாண்டி ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ளக்கூடாது, கைகளை குலுக்கி கொள்ளக்கூடாது போன்ற பல விதிமுறைகள் இருக்கிறது. இப்படித்தான் பிசிசிஐ கொரோனா வைரஸ் இல்லாமல் இந்த தொடரை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எடுக்கப்பட்ட ஐடியா ஆகும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அதனை தாண்டி ஒரு பாதுகாப்பு வளையத்தை வீரர்களின் கையில் கட்டி விட்டுள்ளது.
இந்த வளையம் வீரர்களின் சொந்த தகவலையடுத்து கண்காணித்துக் கொண்டிருக்கும். இது ப்ளூடூத் வழியில் ஒரு மிகப்பெரிய கணினியில் இணைக்கப்பட்டிருக்கும். இதில் வீரர்களின் இதயத்துடிப்பு மாற்றம் மூச்சுவிடுதல் அளவு உடலின் வெப்பநிலை போன்ற பல தகவல்களை எடுத்து கணினிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.
இதில் ஏதேனும் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் கொரோனா வைரஸ் இருக்கும் அளவிற்கு மாற்றங்கள் இருந்தாலும் உடனடியாக கணிப்பொறி நிர்வாகத்திற்கு செய்தி அனுப்பிவிடும். இதனை வைத்து தான் மும்பை இந்தியன்ஸ் அணியை தங்களது வீரர்களை பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் அட்டவணை நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று அறிவிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகத்தின் தலைவர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.