14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது.
இதுவரை 5 முறை டைட்டில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டும் நிச்சயம் கோப்பையை வெல்லும் என் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி உலக அளவில் உள்ள அணிகளில் டி20 போட்டிக்கு உகந்த அணி என்று பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் வல்லுனர்களும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2021 கானா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து 3 முறை கோப்பையை வென்ற அணி என்ற ஒரு சாதனையை படைக்கும். எனவே அதற்கான மிக முக்கியமான ஏற்பாடுகளை மும்பை இந்தியன்ஸ் அணி செய்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, இந்த ஐபிஎல் போட்டியில் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெறும், அப்படி ஒருவேளை மும்பை அணி தோல்வியடைந்தால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கிரன் மோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மற்ற வீரர்களுக்கும் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்த்த நிலையில் எந்த ஒரு வீரருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது, இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.