என்னை வாழவைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. ; விரக்தியில் ஓய்வை அறிவித்த முரளி விஜய் !! 1
என்னை வாழவைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. ; விரக்தியில் ஓய்வை அறிவித்த முரளி விஜய் ..

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பதாக முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரராக அசத்திய தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய்., இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள் 17 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை அச்சாணியாக திகழ்ந்திருக்கிறார்.

என்னை வாழவைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. ; விரக்தியில் ஓய்வை அறிவித்த முரளி விஜய் !! 2

ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடருக்குப்பின் இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் உள்ளூர் போட்டி ஐபிஎல் போட்டி என இரண்டிலும் கவனம் செலுத்தி விளையாட துவங்கிய முரளி விஜய் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு இவரால் ஜொலிக்க முடியவில்லை, இதனால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இவரால் மீண்டும் இடம் பிடிக்க முடியாமலே போய்விட்டது.

என்னை வாழவைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. ; விரக்தியில் ஓய்வை அறிவித்த முரளி விஜய் !! 3

இந்த நிலையில் 38 வயதாகும் முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் அரங்கின் மூன்று விதமான தொடர்களிலிருந்தும் ஓய்வு அறிவிப்பதாக தன்னுடைய twitter பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நன்றி உணர்வுடனும் பணிவுடனும் இன்று நான், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்கிறேன். என் வாழ்வில் 2002 முதல் 2018 வரை சர்வதேச இந்தியா அணிக்காக விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத வருடங்கள் ஆகும். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சென்ப்லாஸ்ட் சன்மருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.

“மேலும் என்னுடைய சக வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்புக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால் அவர்களால் தான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நினைவானது. மேலும் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்து என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் முரளி விஜய் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் ஓய்வு குறித்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *