இந்திய கிரிக்கெ வீரர் முரளி விஜய் மற்றும் அவரது மனைவி நிகிதாவிற்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடட்டார்.
தனது முதல் குழந்தையான நிவான் பிறந்த குழந்தையை கையில் வைத்துள்ள அந்த ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Two Rockstars!! One introducing the other to the world ?. Feeling Blessed?. #grateful #lovetoall #moretolife pic.twitter.com/1dPJtSpcK9
— Murali Vijay (@mvj888) October 2, 2017
முரளி விஜய்-நிகிதா தம்பதியினருக்கு ஏற்க்கனவே நிவான் என்ற மகனும் இவா என்ற மகளும் உள்ளது குறிபிடத்தக்கது. இருவரும் 2012 ஆம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது கிர்க்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முரளி விஜய் தற்போது தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளை ஆடத் தயாராகி வருகிறார்.
இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு கடந்த பல வருடங்களாக சிறந்த துவக்க வீரராக செயல்பட்டு வந்த முரளி விஜய் கடந்த் இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் குணமடைந்து விட்டதாக அறிவித்தார்.ஆனால் அக்டைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகினார் அவருக்கு மாற்றாக சிகர் தவான் களம் இறக்கப்பட்டார்.