பட்டது எல்லாம் போது... டி.20 போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச அணியின் மிக முக்கியமான வீரர் !! 1

சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வியை அறிவிப்பதாக பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிக்குர்ரஹீம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர நாயகன் முஸ்பிக்குர் ரஹீம் பங்களாதேஷ் அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். பல இக்கட்டான நேரத்திலும் சிறப்பான பேட்டிங்கின் மூலம் பங்களாதேஷ் அணியை சரிவிலிருந்து மீட்ட முஸ்பிக்குர் ரஹீம் தற்பொழுது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார்.

பட்டது எல்லாம் போது... டி.20 போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச அணியின் மிக முக்கியமான வீரர் !! 2

டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணியின் சிறந்த கேப்டன் என்ற நற்பெயரை பெற்ற பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஸ்பிக்குர் ரஹீம், ஆசிய கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் விக்கெட்கீப்பிங் என இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டு பங்களாதேஷ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததால் இனிமேல் இவரை பங்களாதேஷ் அணி டி20 தொடரிலும் சேர்க்கமட்டார்கள் என்று பேசப்பட்டு வந்தது.

 

பங்களாதேஷ் அணியில் முன்னாள் கேப்டனாக செயல்பட்ட 35 வயதாகும் முஸ்பிக்குர் ரஹீம் தன்னுடைய தவறை உணர்ந்து இனிமேலும் சர்வதேச டி20 போட்டியில் பங்குபெரவில்லை என்றும் இனிமே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன் என்றும் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பட்டது எல்லாம் போது... டி.20 போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச அணியின் மிக முக்கியமான வீரர் !! 3

அதில் அவர் பதிவிட்டிருந்ததாவது, “நான் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களின் கவனம் செலுத்தப் போகிறேன். ஆனால் பிரான்சிஸ் லீக் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் நிச்சயம் என்னுடைய அணி பெருமைப்படும் வகையில் பங்காற்றுவேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் சர்வதேச டி20 தொடர்களிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த நிலையில் முஸ்பிக்குர் ரஹீமும் தன்னுடைய ஓய்வை அறிவித்திருப்பது பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

சர்வதேச டி20 போட்டியில் 102 போட்டிகளில் பங்கேற்ற ரஹீம் 1500 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *