“என் காயத்திற்கு இதுதான் மருந்து என்று என் மகள் அதிதி நம்புகிறாள்” – புஜாரா
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை 2 – 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றிருக்கிறது. அதில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் எடுத்தது தோல்வி அடைந்தது.
இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0 என இழந்து விடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் அதிரடி வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி விமர்சனம் செய்த அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்தது.

இந்த வரலாற்று வெற்றிக்கு இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் தான் முக்கிய காரணம் என்று கூறி பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக புஜாராவும் இந்திய அணி வெற்றிபெற ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சில் புஜாரா 25, 56 ஆகிய ரன்களைக் குவித்துள்ளார்.
2வது இன்னிங்சில் புஜாரா 211 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக விளையாடி 56 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் தான் இந்திய அணியின் வெற்றியை இருக்கிறது என்பதனால் புஜாரா விக்கெட்டை இழக்க கூடாது என்று நிதானமாக விளையாடி வந்தார். அப்போது பாட் கமின்ஸ் மற்றும் ஹாசல்வுட்டின் 10க்கும் மேற்பட்ட பந்துகள் புஜாராவின் உடலில் பதம் பார்த்தது. இதனால் புஜாரா காயமடைந்தார். இருந்தாலும் அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.

அப்போது போட்டி முடிந்தவுடன் காயமடைந்த புஜாராவின் இரண்டு வயது மகள் அதிதி கூறியதாவது “அவர்(புஜாரா) வீட்டிற்கு வந்தவுடன் அவரது காயத்தில் நான் முத்தமிடுவேன். இதன் பின் அவரது காயம் சரியாகிவிடும்” என்றார்.
இதையடுத்து பேசிய புஜாரா “அவள் கிழே விழும்போது நான் இதை தான் செய்வேன். இதனால் தான் ஒரு முத்தம் ஒவ்வொரு காயத்தையும் குணமாக்கும் என்று அவள் நம்புகிறாள்” என்று புஜாரா கூறியுள்ளார்.
