நான் கேப்டன் பதவியை இழந்ததற்கு இவர் தான் காரணம்; ரகசியத்தை உடைத்த முன்னாள் கேப்டன் !! 1

நான் கேப்டன் பதவியை இழந்ததற்கு இவர் தான் காரணம்; ரகசியத்தை உடைத்த முன்னாள் கேப்டன்

ராஸ் டெய்லருடன் கேப்டன்சி மோதலில் ஈடுப்பட்டது நியூஸிலாந்து கிரிக்கெட்டுக்கு ஒரு தீராக்கறையாகப் போய்விட்டது என்று முன்னாள் அதிரடி வீரரும் நியூஸிலாந்து கேப்டனுமான பிரெண்டன் மெக்கல்லம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் ராஸ் டெய்லருடன் இன்று வரை நட்பு ஏற்படவில்லை, ஆனால் பரஸ்பர மரியாதை இருக்கிறது என்று மெக்கல்லம் தெரிவித்தார்.

2011 தோனி தலைமையில் இந்திய உலக கோப்பையை வென்ற தொடர் முடிந்தவுடன் டேனியல் வெட்டோரி நியூஸி. கேப்டன்சியைத் துறந்தார். ராஸ் டெய்லர் கேப்டன் பொறுப்பேற்றார்.

நான் கேப்டன் பதவியை இழந்ததற்கு இவர் தான் காரணம்; ரகசியத்தை உடைத்த முன்னாள் கேப்டன் !! 2

இது தொடர்பாக பிரெண்டன் மெக்கல்லம் கூறும்போது, “கேப்டன்சி மோதல் எனக்கும் ராஸ் டெய்லருக்கும் இடையேயான நட்பை பாதித்தது. ராஸ் டெய்லருடன் இளமைக்கால கிரிக்கெட் முதல் எனக்கு தொடர்பு உண்டு. நான் அண்டர்-19 கேப்டனாக இருக்கும் போது ராஸ் டெய்லர் துணை கேப்டன். இருவருக்கும் உறவு முறை நன்றாகத்தான் இருந்தது.” என்றார்.

அப்போதுதான் 2012-ல் இலங்கைக்கு எதிரகா டெஸ்ட் தொடர் 1-1 என்று ட்ரா செய்யபப்ட்டது. டெய்லருக்கும் கோச் மைக் ஹெஸனுக்கும் கொஞ்சம் உரசல் ஏற்பட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடர் மற்றும் மே.இ.தீவுகள் தொடர், இந்திய தொடர்களில் தோல்வி ஏற்பட்டது.

நான் கேப்டன் பதவியை இழந்ததற்கு இவர் தான் காரணம்; ரகசியத்தை உடைத்த முன்னாள் கேப்டன் !! 3

இது தொடர்பாக மெக்கல்லம் கூறும்போது, “கேப்டன் பொறுப்பிற்காக நாங்கள் இருவருமே நேர்காணலுக்குச் சென்றோம், குழுவிடம் நியூஸிலாந்து கிரிக்கெட் எதிர்காலத்துக்கான திட்ட வரைபடத்தை நாங்கள் அளிக்க வேண்டும். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதே எங்களுக்கு உண்மையில் தெரியவில்லை.

அப்போது மட்டும் நான் போட்டி போடாமல் ராஸ் டெய்லரிடம் கேப்டன்சியைக் கொடுங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று நான் தணிந்து போயிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது.

இந்தக் கேப்டன்சி போட்டிதான் நியூஸிலாந்து கிரிக்கெட்டின் மோசமான் கறையாகிப் போனது. என்னையும் ராஸையும் அழுத்தத்தில் ஆழ்த்தியது. இதில் ராஸ் டெய்லரிடமிருந்து கேப்டன்சி என்னிடம் தரப்பட்டது.

இன்னமும் கூட எங்களிடையே நட்பு இல்லை, ஆனால் இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருக்கிறது” என்றார் மெக்கல்லம்.

2012- டிசம்பரில் மெக்கல்லம் நியூஸிலாந்து கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *