இந்திய அணியில் மீண்டும் இடம்பெற கடினமாக உழைக்கிறேன் - சுரேஷ் ரெய்னா 1

உடல்தகுதி காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் சுரேஷ் ரெய்னா, தனது கடினகாலங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவின் நேர்த்தியான ஆட்டம் எப்போதும் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும், மோசமான உடல்தகுதி காரணமாக அணியில் இடம்பெற கடுமையாக போராடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்று கவுரவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்திய அணியில் மீண்டும் இடம்பெற கடினமாக உழைக்கிறேன் - சுரேஷ் ரெய்னா 2
NOTTINGHAM, ENGLAND – JULY 11:
Suresh Raina of India throws during a nets session at Trent Bridge on July 11, 2018 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா சிறந்த பங்களிப்பாளராக உள்ளார். அவர் விளையாட்டின் அனைத்து பிரிவுகளிலும் அணிக்கு சிறந்த வீரராக விளங்கியுள்ளார். இதற்கிடையில், ஸ்போர்ட்ஸ்கீடாவின் ஒரு பேட்டியில், சுரேஷ் ரெய்னா 2019 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக்கில் சிறப்பாக செய்லபட எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

சையத் முஸ்தாக் அலி டிராபி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆட உதவியாக இருக்கும் – சுரேஷ் ரெய்னா

சையத் முஸ்தாக் அலி டிராபி எனக்கு சிறப்பாக அமைந்தது. நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். வருகின்ற ஐபில் போட்டியில் எனது முழு திறமையை சென்னை அணிக்காக வெளிப்படுத்த காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இந்திய அணியில் மீண்டும் இடம்பெற கடினமாக உழைக்கிறேன் - சுரேஷ் ரெய்னா 3

மீண்டும் அணியில் இடம்பெறுவது குறித்து கேட்டதற்கு, நான் நிச்சயம் எனது பங்களிப்பை அளிப்பேன், மீதமெல்லாம் தேர்வுக்குழுவின் கையில்  தான் உள்ளது என்றார்.

“நான் செய்யும் செயல்களில் திருப்தி எனக்கு உள்ளது, தற்போது உடற்பயிற்சிகளையும் கவனத்தில் கொண்டு முன்பைவிட அதிக உடற்பயிற்சி செய்து வருகிறேன். நான் வலைபயிற்சியில் ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை ஈடுபடுகிறேன். சையத் முஸ்தாக் அலி டிராபி (இந்தியாவின் உள்நாட்டு டி20 போட்டி) ஐபிஎல் முன் எனக்கு சில போட்டிகளில் பயிற்சி அளித்துள்ளது. ஒரு இந்திய வீரராக, என் வேலை கடினமாக உழைக்க வேண்டும் அதுவே  சிறந்தது என்று நம்புகிறேன். “

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *