இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகளும் ஸ்மிரிதி மந்தனா, இவர் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பையில் முதலில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று மிகவும் பிரபலம் அடைந்தார். தற்போது ஸ்மிரிதி மந்தனா இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சங்கக்காராவை போல விளையாட ஆசை படுவதாக கூறியுள்ளார்.
இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார்.
அவரது துடுப்பாட்டத்தைக் கண்ட பலரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி போன்று இருப்பதாக கூறி வருகின்றனர்.
இது குறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில், நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் துடுப்பாட்டத்தை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே பழகிவிட்டது.
சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சங்ககாரவை பார்த்து ஆடுவது எனக்குள் ஒரு தெளிவு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அவரிடம் இருந்து நான் என்னை மேம்படுத்தி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இது குறித்து சங்ககாரா கூறுகையில், ஸ்மிரிதி போன்ற மிக திறமை வாய்ந்த ஒரு இளம் வீரர் என்னை பற்றி பேசியது எனக்கு பெருமையே ஆகும்.
அவரை போன்ற ஒருவர் என்னை முன்னுதாரமாக எடுத்து விளையாடி வருவது என்னை மேலும் பாக்யம் செய்தவராக மாற்றும் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
ஸ்மிரிதி சிறப்பான ஆட்த்தை வெளிப்படுத்தி வருவதால், அவுஸ்திரேலியாவில் நடக்கும் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஸ்மிரிதி விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.