அங்க எல்லாம் போயிட்டா நான் வேற மாதிரி; விராட் கோஹ்லி சொல்கிறார் !! 1
அங்க எல்லாம் போயிட்டா நான் வேற மாதிரி; விராட் கோஹ்லி சொல்கிறார்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நாளை (ஜூன் 23ம் தேதி) இங்கிலாந்து செல்கிறார்கள். அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி உடனான ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்தச் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் இருவரும் பதில் அளித்தனர்.

அங்க எல்லாம் போயிட்டா நான் வேற மாதிரி; விராட் கோஹ்லி சொல்கிறார் !! 2

விராட் கோலி பேசுகையில், “வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது அவர்களின் நினைவில்லை.

இங்கிலாந்து சென்றால் என்ன செய்வீர்கள் என்று நீங்கள் என்னை கேட்டால், அங்குள்ள சாலைகளில் நடப்பேன், தெருவிலுள்ள கடைகளில் காபி சாப்பிடுவேன் என்றுதான் சொல்வேன். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் என்னுடைய எண்ணங்களே வித்தியாசமாக இருக்கும். எங்கு செல்கிறோமோ, அந்த நாட்டில் மகிழ்ச்சியாக அனுபவிப்பேன். கிரிக்கெட்டைப் பற்றி கூட யோசிக்கமாட்டேன். எனக்கு தெரியும் நான் நல்ல பாஃமில் இருந்தால், நன்றாக விளையாடுவேன் என்று.

அங்க எல்லாம் போயிட்டா நான் வேற மாதிரி; விராட் கோஹ்லி சொல்கிறார் !! 3

இது எனக்கு மற்றொரு தொடர் அவ்வளவுதான். ஒரு அணியாக எங்களுக்கு மிகவும் அற்புதமான நேரம். தென்னாப்பிரிக்கா தொடரில் நடந்தது நமக்கு தெரியும். அதன்பிறகு நிறைய கடினமான டெஸ்ட் தொடர்களில் விளையாட விரும்பினோம்” என்றார்.

மேலும், ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் 100 சதவீதம் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். என்னுடைய கழுத்து நன்றாக உள்ளது. மும்பையில் 6 செஷன்ஸ் இருந்தது. அது நல்ல பயிற்சியாக இருந்தது. நான் தயாராக உள்ளேன்” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published.