உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்களில் துவங்க இருக்கிறது. இதில் இந்த அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என உறுதிப்பட கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்.
2019ம் ஆண்டுக்கான வேலைகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதற்க்கான போட்டி அட்டவணைகளையும் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிடப்பட்டன. இதில் மே மாதம் 30ம் தேதி துவங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சில விதிமுறை மாற்றங்களை கொண்டுவந்து தரவரிசையில் உள்ள முதல் 10 அணிகள் மட்டுமே ஆட முடியும் எனவும் தெரிவித்தது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
நாளுக்கு நாள் உலகக்கோப்பை போட்டிக்காக அணிகளும் வீரர்களும் கடினமாக பயிற்சி செய்து தயார் படுத்திக்கொள்கின்றனர். தற்போது இருந்தே விமர்சகர்களும் சம்பவங்களும் யார் சிறப்பாக செயல்படுவார், வெல்வார் என்பதை கணிக்க துவங்கி விட்டன.

நாசர் ஹுசைன் கணிப்பு

முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் ஹுசைன் உலகக்கோப்பையை இறுதி போட்டி குறித்தும் வெல்வது யார் என்பது குறித்தும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது லார்ட்ஸில் நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், வர்ணனையில் ஈடுபட்டிருந்த நாசர் ஹுசைன், “இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் அனைவரின் விருப்ப அணிகளாக இருப்பர். காரணம், இரு அணிகளிலும் உள்ள வீரர்களில் செயல்பாடு தான். குறிப்பாக லிமிடெட் ஓவர்களில் அவர்களின் ஆட்டம்”.
இன்றிலிருந்து சரியாக ஒருவருடம் கழித்து நடக்க இருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என கூறினார்.