கே.எல் ராகுலின் தவறால் தொடர் நாயகன் விருதை தவறவிட்ட நடராஜன் ! நடுவர்களிடம் வாதிட்ட விராட் கோலி ! 1

கே.எல் ராகுலின் தவறால் தொடர் நாயகன் விருதை தவறவிட்ட தங்கராசு நடராஜன் ! நடுவர்களிடம் வாதிட்ட விராட் கோலி !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 185 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, இருந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்த போட்டியின் போது இந்திய வீரர் நடராஜன் வழக்கம்போல ஓவர்கள் பந்து வீச தொடங்கினார். காயம் காரணமாக இரண்டாவது ஆட்டத்தில் விளையாடாமலிருந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார். அபாரமாக பந்துவீசிய தங்கராசு நடராஜன் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால் அவர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திருக்க வேண்டியது. கே.எல் ராகுலின் தவறால் அந்த விக்கெட் அவருக்கு கிடைக்கவில்லை.

கே.எல் ராகுலின் தவறால் தொடர் நாயகன் விருதை தவறவிட்ட நடராஜன் ! நடுவர்களிடம் வாதிட்ட விராட் கோலி ! 2

16-வது ஓவரில் தங்கராசு நடராஜன் வீசிய பந்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட்டின் காலில் பட்டது இதனால் எல்.பி.டபிள்யூ கேட்டார் நடராஜன் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதன் பிறகு பெரிய திரையில் காட்டப்பட்டது. அப்போது மிகத்துல்லியமான விக்கெயடென தெரியவந்தது உடனடியாக டி.ஆர்.எஸ் கேட்டார் விராட் கோலி.

இதனை ஏற்றுக்கொண்ட நடுவரும் மறுபரிசீலனை செய்ய மூன்றாவது நடுவரை அணுகினார். ஆனால் உடனடியாக பேட்ஸ்மேன் மேத்யூ வேட் இப்படி செய்யக்கூடாது என்று தெரிவித்து இருந்தார். மேலும் பெரிய திரையில் காண்பித்த பிறகு அதனை பார்த்துவிட்டு மேல்முறையீடு செய்யலாம் என கேள்வி எழுப்பினார். உடனடியாக அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு டி.ஆர்.எஸ் கிடையாது என்று அறிவிக்க, அதிர்ச்சி அடைந்த விராட் கோலி நடராஜனுக்காக உடனடியாக அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

கே.எல் ராகுலின் தவறால் தொடர் நாயகன் விருதை தவறவிட்ட நடராஜன் ! நடுவர்களிடம் வாதிட்ட விராட் கோலி ! 3

எனினும் நடுவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அந்த இடத்தில் பேசி இருக்க வேண்டியது விக்கெட் கீப்பராக இருந்த கே.எல் ராகுல் தான் ஏனெனில் அவர்தான் இதனை சரியாக கணிக்க வேண்டும் உடனடியாக டி.ஆர்.எஸ் கேட்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் கேட்ச் எல்.பி.டபிள்யூ போன்றவைகளுக்கு டி.ஆர்.எஸ் கேட்டு இரண்டு முறை வாய்ப்பை தவறவிட்டார் கேஎல் ராகுல்.

ஆனால் மிகச் சரியாக விழும் போது அதனை கேட்காமல் தவறி நாடராஜனின் விக்கெட்டை மறைமுகமாக பறித்து விட்டார். இந்த விக்கெட் எடுத்திருந்தால் நடராஜன் தொடர் நாயகன் விருது பெற்று இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் 3 போட்டிகளில் விளையாடி தற்போது 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

கே.எல் ராகுலின் தவறால் தொடர் நாயகன் விருதை தவறவிட்ட நடராஜன் ! நடுவர்களிடம் வாதிட்ட விராட் கோலி ! 4

இன்னொரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் 7 விக்கெட்டென மாறி இருக்கும். கண்டிப்பாக ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் நடராஜனுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்து இருக்கும். கே.எல் ராகுலின் ஒரு சிறிய தவறால் இதுவும் பரிபோனது. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா அது நடராஜனுக்கு சொந்தம் என்று அவரிடம் கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *