கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டர்-நைலுக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் எதிரியான போட்டிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டது. அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் அற்புதமாக வீசினார்.
பெங்களூருக்கு எதிரான போட்டியில் முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை பெற செய்தார். அதுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிசென்றார். ஆனால், புனேவிற்கு அவர் அணியுடன் பயணிக்க வில்லை.
கோல்ட்டர் நைல் விளையாடாததால், அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் அல்லது ட்ரெண்ட் போல்ட் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 49-ரன்னுக்கு சுருட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அடுத்து வரும் போட்டிகளுக்கு புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கோல்ட்டர் நைலுக்கு ரெஸ்ட் கொடுத்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பிர். தற்போது, புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 2-ஆம் இடத்தில உள்ளது.
இதுவரை கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியும் 2 தோல்வியும் கண்டுள்ளது. அடுத்த போட்டியில் புனேவுடன் மோதுகிறது. புனே அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றதால், இந்த போட்டியில் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.