நாதன் லியான் பந்துவீச்சை யாராவது அடியுங்கள்; ட்விட்டரில் பதிவிட்ட கெவின் பீட்டர்சன் !! 1

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாதன் லியான் பந்து வீச்சு குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 473ரன்கள் எடுத்தது.இதில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்(93), டேவிட் வார்னர்(95) மார்னஸ்(103) எடுத்து அசத்தினார்.

நாதன் லியான் பந்துவீச்சை யாராவது அடியுங்கள்; ட்விட்டரில் பதிவிட்ட கெவின் பீட்டர்சன் !! 2

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது, குறிப்பாக இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட்(62), டேவிட் மாலன்(80) ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களான மிட்சல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் போன்ற பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார், தற்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் மார்கஸ் ஹாரிஸ்(21*),மிட்செல் நேசெர் (2*) ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் எடுத்த நிலையில் முன்னிலையில் உள்ளது.

நாதன் லியான் பந்துவீச்சை யாராவது அடியுங்கள்; ட்விட்டரில் பதிவிட்ட கெவின் பீட்டர்சன் !! 3

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாதன் லியான் பந்துவீச்சை யாராவது அடியுங்கள், அவர் எந்த ஒரு வேரிஷனும் இல்லாமல் உலக கிரிக்கெட்டில் சுழற்பந்து வீசுகிறார் என்று பதிவிட்டிருந்தார் இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/KP24/status/1472117613610377217?s=20

ஆஸ்திரேலிய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு பல வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *