நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றெடுத்தது. மேலும், டி20 போட்டியிலும் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வென்ற நிலையில் நவ்.7 ஆம் தேதி திருவனந்தபுரம் க்ரீன் ஃபீல்டு மைதானத்தில் தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தியாவில் நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளுக்கு முன்னரும் இரு நாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டு பின்னர் தான் துவங்கும். ஆனால், திருவனந்தபுரம் மைதானத்தில் போட்டி துவங்கும் முன் நல்ல மழை பெய்ததால் போட்டியின் முதல் சில மணி நேரம் வீணானது. இதன் காரணமாக மேலும் நேரம் வீனாகிவிடக்கூடாவது என்பத்ற்க்காக தேசிய கீதம் பாடப்படாம்ல் போட்டி துவங்கியது.
மேலும், இந்த க்ரீன் ஃபீல்டு மைதானத்தில் முதன் முதலாக சர்வ்தேச போட்டிகள் நடத்தப்பட இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டும் போட்டி நடத்தப்படமால் போய் விடக்கூடாது என்பதற்க்காகவும் வெகுவேகமாக மழை நின்றவுடன் போட்டி துவங்கியது.
இதனால் கேரளா கிரிக்கெட் அசோசியேசன் செயளாலர் ஜயேஷ் ஜார்ஜ் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்துள்ளார்,
ஆம, அங்கு எங்கள் பக்கத்தில் இருந்து தவறு நடந்துவிட்டது. நாங்கள் அனைவரும் அங்கு இருந்தோம், மழை நின்றவுடன் போட்டியை வேகமாக துவக்க தயாராக இருந்தோம். இதனால் தேசிய கீதம் பாட மறந்து விட்டோம். இது ஒரு முக்கியமான் விசயமாகும், இதற்க்காக மன்னிப்பு கேட்கிறோம். இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காது.
எனக் கூறி மன்னிப் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில் போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என முயற்சி செய்த மைதான பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்.
இந்திய அணி இந்த 8 ஒவர் போட்டியில் அபாரமாக 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் மைதான பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார்.
இந்த போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்தோம், நல்லபடியாக போட்டி நடக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. மக்கள் ஏமாற்றத்துடன் செல்லாமல் போட்டியை ரசித்தது மகிழ்க்சி அளிக்கிறது.
ஒருநாள் தொடர் துவங்கிய போட்திலிருதே நியூசிலாந்து அணியிடம் ஒரு நல்ல போராட்டத்தை எதிர்பார்த்தோம். இந்த போட்டியில் ஆரம்பத்தில் சற்று பதட்டமாக இருந்தது. ஆடுகளத்தில் சற்று நீர் சேர்ந்துவிட்டது. எனக் கூறினார் கோலி