எனக்கு வாய் மட்டுமில்லடா பவுலிங்கும் இருக்கு... பவுலிங்கில் மிரட்டிய நவீன் உல் ஹக்... சூரியகுமார், கிரீன், நேஹல் வதேரா பங்களிப்பால் மும்பை அணி 182 ரன்கள் குவிப்பு! 1

டாப் ஆர்டரில் கிரீன், சூரியகுமார் கலக்கினர். மிடில் ஆர்டரில் திலக் வர்மா, நேஹல் வதேரா சிறப்பாக ஆடியதால, லக்னோ அணிக்கு எதிரான எலிமினெட்டர் போட்டியில் 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

எனக்கு வாய் மட்டுமில்லடா பவுலிங்கும் இருக்கு... பவுலிங்கில் மிரட்டிய நவீன் உல் ஹக்... சூரியகுமார், கிரீன், நேஹல் வதேரா பங்களிப்பால் மும்பை அணி 182 ரன்கள் குவிப்பு! 2

லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் பிடித்த லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு 30 ரன்கள் அடித்திருந்தபோது, நவீன் உல் ஹக் வீசிய பந்தில் ரோகித் சர்மா(11) அவுட்டானார். அடுத்த ஓவரில் யாஷ் தாக்கூர் பந்தில் இஷான் கிஷன்(15) அவுட்டானார்.

எனக்கு வாய் மட்டுமில்லடா பவுலிங்கும் இருக்கு... பவுலிங்கில் மிரட்டிய நவீன் உல் ஹக்... சூரியகுமார், கிரீன், நேஹல் வதேரா பங்களிப்பால் மும்பை அணி 182 ரன்கள் குவிப்பு! 3

38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, 3ஆவது விக்கெட்டிற்கு கேமரூன் கிரீன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 66 ரன்கள் சேர்த்தது.

எனக்கு வாய் மட்டுமில்லடா பவுலிங்கும் இருக்கு... பவுலிங்கில் மிரட்டிய நவீன் உல் ஹக்... சூரியகுமார், கிரீன், நேஹல் வதேரா பங்களிப்பால் மும்பை அணி 182 ரன்கள் குவிப்பு! 4

நவீன் உல் ஹக் வீசிய 11ஆவது ஒவரில் சூரியகுமார் யாதவ்(33) முதலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் கடைசி பந்தில் கிரீன்(41) போல்டாகி வெளியேறினார். இதிலிருந்து மும்பை அணியின் ரன்குவிக்கும் வேகம் குறைந்தது.

எனக்கு வாய் மட்டுமில்லடா பவுலிங்கும் இருக்கு... பவுலிங்கில் மிரட்டிய நவீன் உல் ஹக்... சூரியகுமார், கிரீன், நேஹல் வதேரா பங்களிப்பால் மும்பை அணி 182 ரன்கள் குவிப்பு! 5

5ஆவது விக்கெட்டுக்கு திலக் வர்மா – டிம் டேவிட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 43 ரன்கள் சேர்த்திருத்த ஜோடியை, டிம் டேவிட்(13) விக்கெட்டை எடுத்து உடைத்தார் யாஷ் தாக்கூர். நன்றாக ஆடிவந்த திலக் வர்மா(26) விக்கெட்டை எடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் நவீன் உல் ஹக்.

கடைசியில் இம்பாக்ட் வீரராக உள்ளே வந்த நேஹல் வதேரா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்து, மும்பை அணியின் ஸ்கொர் 180 ரன்கள் கடக்க உதவினார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

எனக்கு வாய் மட்டுமில்லடா பவுலிங்கும் இருக்கு... பவுலிங்கில் மிரட்டிய நவீன் உல் ஹக்... சூரியகுமார், கிரீன், நேஹல் வதேரா பங்களிப்பால் மும்பை அணி 182 ரன்கள் குவிப்பு! 6

நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகள், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகள் மற்றும் மோசின் கான் 1 விக்கெட் எடுத்தனர்.

சென்னை சேப்பாக்கம் போன்ற பிட்சில் 183 ரன்களை எட்டி, இரண்டாம் குவாலிபயர் போட்டிக்கு லக்னோ அணி தகுதி பெறுமா? சென்னையில் மும்பை வைத்திருக்கும் ரெக்கார்டை தொடருமா? பொறுத்திருந்து காண்போம்!.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *