கடைசி போட்டியில் இவர்கள் தான் களமிறங்குவார்கள்; ரிக்கி பாண்டிங் கணிப்பு !! 1

கடைசி போட்டியில் இவர்கள் தான் களமிறங்குவார்கள்; ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்திய அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற வீரர்கள் பட்டியல் குறித்தான தனது கணிப்பை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கவுள்ள 4வது டெஸ்டில் பங்கேற்கும்ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி போட்டியில் இவர்கள் தான் களமிறங்குவார்கள்; ரிக்கி பாண்டிங் கணிப்பு !! 2
BRISBANE, AUSTRALIA – NOVEMBER 03: Marnus Labuschagne of Queensland leaves the field after being dismissed during the Sheffield Shield match between Queensland and Western Australia at Allan Border Field on November 3, 2018 in Brisbane, Australia. (Photo by Chris Hyde/Getty Images)

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும்ஜன. 3ல் சிட்னியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில்1–2 என பின்தங்கி உள்ள ஆஸ்திரேலிய அணி, சிட்னி டெஸ்டில் வென்றால்மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலைக்குதள்ளப்பட்டது.

இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில்சுழற்பந்துவீச்சு ‘ஆல்ரவுண்டர்’ மார்னஸ் லாபஸ்சாக்னே கூடுதலாகசேர்க்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்குஎதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 2 போட்டியில் (81 ரன்,7விக்கெட்) விளையாடி உள்ளார். இந்திய தொடருக்கு பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்,மிட்சல் மார்ஷ் ஆகியோர் ‘மிடில்ஆர்டரில்’ இடம் பிடித்திருந்ததால் இவருக்குவாய்ப்பு கிடைக்கவில்லை.

கடைசி போட்டியில் இவர்கள் தான் களமிறங்குவார்கள்; ரிக்கி பாண்டிங் கணிப்பு !! 3

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 14 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலில் இருந்து யார் யார் நீக்கப்படுவார்கள் யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ள அவரது தனிப்பட்ட கணிப்பின்படி கடைசி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆரோன் பின்ச் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரரான மார்னஸ் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி;

டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்,மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ், மிட்சல் மார்ஷ்,நாதன் லியான், ஷான் மார்ஷ், பட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டார்க்,ஜோஷ் ஹேசல்வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *