அவர பார்முக்கு வந்துட்டா எதிரணிக்குத் தான் பிரட்சனை ; இந்திய அணியின் ஆல்ரவுண்டரை பாராட்டிய முன்னாள் வீரர் !! 1
அவர பார்முக்கு வந்துட்டா எதிரணிக்குத் தான் பிரட்சனை ; இந்திய அணியின் ஆல்ரவுண்டரை பாராட்டிய முன்னாள் வீரர்..

ஹர்திக் பாண்டியாவை போல் ஒரு வீரர் கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டி பேசியுள்ளார்.

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என தொடரை வென்று இந்திய அணி அடுத்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கெடுத்து விளையாடுவதற்காக தயாராகி வருகிறது.

அவர பார்முக்கு வந்துட்டா எதிரணிக்குத் தான் பிரட்சனை ; இந்திய அணியின் ஆல்ரவுண்டரை பாராட்டிய முன்னாள் வீரர் !! 2

2023-ஆம் ஆண்டு இந்திய அணி., விளையாடிய ஒவ்வொரு தொடரிலும் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்து வருவதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு தொடருக்கு தொடர் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம், ஏனென்றால் இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்து இந்திய அணியை பலம் வாய்ந்த அணியாக வைத்திருக்கின்றனர்.

இதனால் இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் வீரர்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருவதோடு அவர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு தங்களால் முடிந்த ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.

அவர பார்முக்கு வந்துட்டா எதிரணிக்குத் தான் பிரட்சனை ; இந்திய அணியின் ஆல்ரவுண்டரை பாராட்டிய முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மாஸ் காட்டி வரும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டி பேசியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் பேசுகையில்,“இந்திய அணியில் இருக்கும் மிகவும் முக்கியமான வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான், அவர் இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை சமநிலையுடன் வைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் திறமை மற்றவரிடம் பார்க்க முடியாது, ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் கிடைப்பதே மிகவும் கடினம். உலகில் ஒரு சில வீரர்களே இவரைப் போன்று உள்ளனர். ஹர்திக் பாண்டியா மட்டும் பார்முக்கு திரும்பி விட்டால் அவரை நிறுத்துவது என்பது மிகக் கடினம்.

அவர பார்முக்கு வந்துட்டா எதிரணிக்குத் தான் பிரட்சனை ; இந்திய அணியின் ஆல்ரவுண்டரை பாராட்டிய முன்னாள் வீரர் !! 4

மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் பழைய பந்தில் விளையாடுவதற்கு தடுமாறும் போது ஹர்திக் பாண்டியா மிகவும் சாதாரணமாக அடித்து ஆடுகிறார். குறிப்பாக டென்னிஸ் பந்துகள் விளையாடுவது போல் இவர் கிரிக்கெட் விளையாடுகிறார்” என்று ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *