ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா..? அணியில் அதிரடி மாற்றம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

விண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நாளை (20-2-22) நடைபெற உள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா..? அணியில் அதிரடி மாற்றம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இந்திய அணி ஏற்கனவே தொடரை கைபப்ற்றிவிட்டதால், இந்திய அணிக்கு இது அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டியாக பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா..? அணியில் அதிரடி மாற்றம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் மூன்றாவது டி.20 போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதே போல் கடந்த இரண்டு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படாத ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. விராட் கோலியின் இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா..? அணியில் அதிரடி மாற்றம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஸ் கான் அல்லது முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.

மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஹர்சல் பட்டேல், தீபக் சாஹர்/ ஆவேஸ் கான், புவனேஷ்வர் குமார்/ முகமது சிராஜ், ரவி பிஸ்னோய், யுஸ்வேந்திர சாஹல்/ குல்தீப் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *