நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் ராபின் ரிஜ்க்கே போட்டியில் தவறான பந்துவீச்சுமுறையை உபயோகித்ததால் ஈசி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. இதற்க்கு ஈசி நிர்வாகம் ஆரை பந்துவீச தடை விதித்து உத்தரவிட்டது.
பெண்கள் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மோதின. இப்போட்டியில் நெதர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ராபின் ரிஜ்க்கே முறைகேடான பந்துவீச்சு முறையை பயன்படுத்தியதாக போட்டியின் அதிகாரிகள் ஐசிசி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதை பரிசீளித்த ஐசிசி நிர்வாகம் 21 வயதான ராபின் க்கு இனி எந்த போட்டியிலும் பந்துவீச கூடாது என அவரது பந்துவீச்சுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.
நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அணி மோதிய போட்டி ஒளிபரப்பு செய்யப்படாததால் அவர்களால் குற்றம் கூற முடியவில்லை. இதற்க்கு அடுத்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியில் ராபின் பந்துவீச்சு படம்பிடிக்கப்பட்டு ஐசிசி நிர்வாகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதை பார்வையிட்ட ஐசிசி நிர்வாக குழு உறுப்பினர்கள் மார்க் கிங், ரிச்சர்ட் இருவரும் ராபின் வீசிய முறைகேடான பந்துவீச்சை உறுதி செய்தனர். இதனால் இந்த முறையை இனி வரும் போட்டிகளில் பயன்படுத்த முடியாதவாறு பந்துவீச்சுக்கு தடை விதித்தது.
மேலும் இந்த அமர்வு இனி வரும் போட்டிகளில் அவர் பந்துவீச வேண்டுமென்றால் ஐசிசி பந்துவீச்சு மேற்பார்வை குழுவிடம் சரியான முறையில் பந்துவீசி ஒப்புதல் வாங்கிய பிறகே இனி வரும் போட்டிகளில் பந்துவீச முடியும் எனவும் உத்தரவிட்டது.