இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் புதிய விதிகள்! இனி வீரர்களுக்கு ஒப்பந்தம் கிடையாது! இதனை செய்தால்தான் அணியில் இடம்! 1

புள்ளிகள் மூலம் வீரர்களை தரவரிசைப்படுத்தி, தரவரிசை வாரியாக ஊதியம் வழங்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவு

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தற்போது உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை 4 பிரிவின் கீழ் பிரிக்க உள்ளதாகவும், அதற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய முறையின்படி ஒவ்வொரு வீரர்களின் கடந்த இரண்டு ஆண்டு உடற்பயிற்சி, ஒழுக்கம், சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் செயல்திறன், தலைமை பண்பு மற்றும் அணியின் ஒட்டுமொத்த மதிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பிரிக்கப்படுவார்கள்.இந்நிலையில் சிந்தனை செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கும், அவர்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் புள்ளிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதை இலங்கை கிரிக்கெட் குழு வெளிப்படுத்த வேண்டும் என்று வீரர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பியுள்ளனர்.

Cricket World Cup 2019: Defeat to Sri Lanka is a shock, admits Eoin Morgan  | Cricket – Gulf News

பலவீனங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு வீரர்களும் அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு

ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் தங்களது தரவரிசைகளை வகைப்படுத்திய ஒதுக்கப்பட்ட புள்ளிகள் குறித்து வெளிப்படுத்த உரிமை உண்டு என்று என்று எஸ்.எல்.சி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வீரரகளின் பிரதிநிதி நிஷன் சிட்னி பிரேமதிராத்னே தி சண்டே டைம்ஸிடம் பத்திரிக்கை இடம் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும். இந்த தகவலை நாட அனைத்து வீரர்களும் ஒற்றுமையாக உள்ளனர். வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது, இதனால் வீரர்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டார்கள் என்பதையும், அவர்கள் என்ன பலவீனங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்றும், இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

SL vs PAK Dream11 Prediction: Top picks for the Pakistan vs Sri Lanka 2nd  ODI Match

வீரர்கள் கேட்ட திருத்தங்கள் தற்பொழுது இறுதி செய்யப்பட்டுள்ளன

இருப்பினும், விளையாட்டு அமைச்சரால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் மேலாண்மைக் குழுவின் ஆஷ்லே டி சில்வா, வீரர்கள் கேட்ட திருத்தங்களைச் செய்த பின்னர் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

வீரர்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளனர், எங்கள் வழக்கறிஞர்கள் செய்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இப்போது நாங்கள் அதை மூத்த வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் கையெழுத்திடப் போவதில்லை என்று இதுவரை சொல்லவில்லை என்றும் விளக்கினார்.

போனஸ் ஊதிய தொகை அமல் படுத்தியுள்ள எஸ்எல்சி கமிட்டி

வருடாந்திர தக்கவைப்பு குறைக்கப்பட்டாலும், புதிய செயல்திறன் அடிப்படையிலான போனஸ் முறையை எஸ்.எல்.சி அறிமுகப்படுத்தியுள்ளது. முதலிடத்தில் உள்ள டெஸ்ட் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் வெற்றியின் விளைவாக 1,50,000 அமெரிக்க டாலர் போனஸ் கிடைக்கும்.

Karunaratne relieved by scrappy Sri Lanka win | CRICKET News | Stadium Astro

இதேபோல் ஒரு நாள் தொடரில் முதலிடத்தில் ஒரு அணியை வீழ்த்துவதன் மூலம் அவர்களுக்கு 75,000 அமெரிக்க டாலர்களும், டி20ஐ தொடரிலும் இதேபோல செயல்பட்டால் 50,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *