ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு; அணியில் அதிரடி மாற்றங்கள்
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டி.20 தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டி.20 தொடருக்கு பிறகு நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் வழக்கமான சீனியர் வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள் வரிசையில் கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், ஹமிஸ் பெனட், டாம் ப்ளண்டல், க்யல் ஜெமிசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக டாம் லதாம் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் டிம் சவுத்தி, டிரண்ட் பவுல்ட், இஷ் சோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி;
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமீஸ் பென்னட், டாம் ப்ளண்டல், காலின் டிகிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், க்யல் ஜெமின்சன், ஸ்காட் குஜ்ஜிலின், டாம் லதாம் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீசம், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சாட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர்.