இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஹானே! 1

நாளை நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நாளைய போட்டியுடன் நிறைவு பெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்று அனைத்து ரசிகர்களும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரரும் துணை கேப்டனுமான அஜிங்கிய ரஹானே நியூசிலாந்து அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஹானே! 2

நியூசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணிகள் மிக சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதாக அஜின்க்யா ரஹானே குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக 2020ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியிலும் இந்திய அணியை மிக அற்புதமாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மைதானங்களில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலவர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள். எனவே ஒரு பொழுதும் நியூசிலாந்து அணியை நாங்கள் சாதாரணமாக நினைத்து கொள்ள மாட்டோம் என்று அஜிங்கிய ரஹானே கூறியிருக்கிறார்

நிறைய அனுபவம் இருந்தாலும் நாளைய போட்டியில் நிதானமாக விளையாட வேண்டும்

2018 ஆம் ஆண்டு, இறுதிப் போட்டி நடைபெற இருக்கிற சவுத்தாம்டனில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்த மைதானம் எப்படி இருக்கும் என்று ஓரளவுக்கு எனக்கு தெரியும். கவுன்டி கிரிக்கெட் தொடரில் ஹேம்ப்ஷிரே அணிக்காக நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஹானே! 3

அப்பொழுது இந்த மைதானத்தில் நான் ஒரு சில சமயங்களில் விளையாடி இருக்கிறேன், இருந்தாலும் இந்த மைதானம் நாளைய போட்டியில் எப்படி இருக்கும் என்பது விளையாடினால் தான் தெரியும் என்று கூறியிருக்கிறார். இயல்பான ஆட்டத்தை நாளை சற்று நிதானமாக வெளிப்படுத்தினால் நிச்சயமாக போட்டியில் வெல்ல முடியும்.

இந்திய வீரர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து இறுதிப் போட்டிக்காக சிறப்பாக தயாராகி வருவதாகவும், தங்களுடைய முழு பங்களிப்பை நாளைய போட்டியில் வெளிப் படுத்தப் போவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இறுதியில் நியூசிலாந்து அணியை நிச்சயமாக வீழ்த்தி இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு இந்திய அணி விளையாடும் என்றும் அஜிங்க்ய ரஹானே கூறி முடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *