அதிசயம் ஆனால் உண்மை; வரலாற்றில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது நியூசிலாந்து !! 1

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதன்முறையாக நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை நூழிலையில் தவறவிட்ட வெறியை தீர்த்து கொள்ளும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் நியூசிலாந்து அணி மிகச்சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மாஸ் காட்டி வரும் நியூசிலாந்து அணி இந்த வருடம் விளையாடிய ஐந்து போட்டியிலும் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

அதிசயம் ஆனால் உண்மை; வரலாற்றில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது நியூசிலாந்து !! 2

ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த ஆண்டை துவங்கிய நியூசிலாந்து அணி அடுத்ததாக நடைபெற்ற விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அசால்டாக வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

அதிசயம் ஆனால் உண்மை; வரலாற்றில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது நியூசிலாந்து !! 3

இந்தநிலையில் பாகிஸ்தான் அணியுடனான இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 117 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து அணி;

மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

372 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி, 373 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. கடைசி இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியை விரைவில் சுருட்டிவிடலாம் என்று நியூசிலாந்து நினைத்திருக்கும். ஆனால் நியூசிலாந்தின் நினைப்பை சிதைத்தனர் பாகிஸ்தான் வீரர்கள்.

அதிசயம் ஆனால் உண்மை; வரலாற்றில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது நியூசிலாந்து !! 4

4ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே அசார் அலி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மற்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் நின்று, கடைசி நாள் ஆட்டத்தின் பவுலிங் கோட்டாவை முடித்து போட்டியை டிரா செய்ய முயன்றனர். ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. கடைசி நாள் ஆட்டம் முடியவிருந்தநிலையில், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணி அதன் கடைசி விக்கெட்டை இழந்து, 2வது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *