நியூசிலாந்து அணி
அடி மேல் அடி வாங்கும் நியூசிலாந்து அணி… மூன்றாவது டி.20 போட்டியில் இருந்து மிக முக்கியமான வீரர் விலகல்

இந்திய அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழை நடைபெற்ற இரண்டாவது டி.20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டி.20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.

அடி மேல் அடி வாங்கும் நியூசிலாந்து அணி... மூன்றாவது டி.20 போட்டியில் இருந்து மிக முக்கியமான வீரர் விலகல் !! 1

கடந்த போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் சொந்த மண்ணில் டி.20 தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணியை விட நியூசிலாந்து அணிக்கே மூன்றாவது டி.20 போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றிக்காக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

கேன் வில்லியம்சன்

கை மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேன் வில்லியம்சன் மூன்றாவது டி.20 போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ள நியூசிலாந்து அணி, மூன்றாவது போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுத்தி கேப்டனாக செயல்படுவார் என்றும் நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

இந்திய அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.