நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர்கள்
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 6வது பவுலிங் ஆப்ஷன் இல்லாததன் காரணமாகவே முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதே தவறை மீண்டும் இந்திய அணி செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் இந்திய அணி தரமான ஆல்ரவுண்டர் களை அணியில் வைத்திருக்கும். குறிப்பாக மீண்டும் பந்துவீச துவங்கிய ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதும் ஒருவேளை ஹர்திக் பாண்டிய சொதப்பினால் அவருக்கு பேக்கப் வீரர்களாக அக்சர் பட்டேல், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் ஆகியோரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
