நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி !! 1

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணி, பங்களாதேஷ் அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நாள் போட்டி தொடங்கியது. பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 211 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி !! 2

இந்தப் போட்டியில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்தை தடுக்கும்போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர் பேட்டிங் செய்யும்போது வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக் கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. காயத்தின் தீவிரம் பற்றி மருத்துவர்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதனால் பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும்போது அவர் களத்துக்கு வரவில்லை. ‘’அவர் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாகத்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை’’ என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி !! 3

வலுவான நிலையில் நியூசிலாந்து;

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் இரட்டை சதம் விளாசினார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடக்கிறது.

முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 74 ரன் எடுத்தார். லிடன் தாஸ் 33 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர், 4 விக்கெட்டும் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிதானமாக ஆடியது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 74 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார். அவருடன் சிறப்பாக ஆடிய நிக்கோலஸ் 107 ரன் விளாசினார். இதையடுத்து அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *