ருத்ரதாண்டவம் ஆடிய கேன் வில்லியம்சன்; இந்திய அணிக்கு இமாலய இலக்கு !! 1

ருத்ரதாண்டவம் ஆடிய கேன் வில்லியம்சன்; இந்திய அணிக்கு இமாலய இலக்கு

இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியானது ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ருத்ரதாண்டவம் ஆடிய கேன் வில்லியம்சன்; இந்திய அணிக்கு இமாலய இலக்கு !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு காலின் முன்ரோவும், மார்டின் கப்திலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் மார்டின் கப்தில் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மற்றொரு துவக்க வீரரான காலின் முன்ரோ 59 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு கைகொடுத்தார். பின்னர் வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 26 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத ராஸ் டெய்லர் 27 பந்துகளில் 54 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 203 ரன்கள் எடுத்துள்ளது.

ருத்ரதாண்டவம் ஆடிய கேன் வில்லியம்சன்; இந்திய அணிக்கு இமாலய இலக்கு !! 3

இந்திய அணியில் முகமது ஷமியை தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

https://twitter.com/Shahrcasm/status/1220620867295535105?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1220620867295535105&ref_url=https%3A%2F%2Fcricketaddictor.com%2Fcricket%2Fnew-zealand-vs-india-2020-twitter-reacts-as-hosts-post-mammoth-total-in-first-t20i%2F

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *