கில், தவான்
சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை… மீண்டும் டாஸை இழந்த இந்திய அணி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

நியூசிலாந்து அணி

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை... மீண்டும் டாஸை இழந்த இந்திய அணி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து !! 1

இந்த போட்டிக்கான இந்திய அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர். இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே போல் மூன்றாவது போட்டிக்கான நியூசிலாந்து அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. பிரேஸ்வெல்லிற்கு பதிலாக ஆடம் மில்னே ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்;

பின் ஆலன், டீவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரியல் மிட்செல், டாம் லதாம், கிளன் பிலிப்ஸ், மிட்செல் சாட்னர், ஆடம் மில்னே, மேட் ஹென்ரி, டிம் சவுத்தி, லோகி பெர்குசன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *