முகமது சிராஜ்
அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு; 160 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு; 160 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து அணி !! 1

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு; 160 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து அணி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்க் சாப்மன் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டீவன் கான்வே – கிளன் பிலிப்ஸ் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது. கிளன் பிலிப்ஸ் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த போதும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீவன் கான்வே 49 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த போதும் விக்கெட்டை இழந்தனர்.

அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு; 160 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து அணி !! 3

இதன்பின் களமிறங்கிய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 19.4 ஓவரில் 160 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு; 160 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து அணி !! 4

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

Leave a comment

Your email address will not be published.