29 வயதில் ஓய்வினை அறிவித்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் !இதற்குப் பின்னால் உள்ள மிகப் பெரிய மர்மம் !!
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருப்பவர் கோரி ஆண்டர்சன். இவர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். தற்போது வரை 13 டெஸ்ட் போட்டிகளிலும் 49 ஒருநாள் போட்டிகளிலும் 39 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அதுபோக 30 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இவை அனைத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 2500 ரன்களும் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
2014ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதமடித்து பல ஆண்டுகளாக முறியடிக்க படாமல் இருந்த சாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார். கோரி ஆண்டர்சன் அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு கடைசியாக நியூசிலாந்து அணிக்காக விளையாடினார்.

தற்போது அந்த அணிக்காக இவர் விளையாடி 2 வருடமாகிறது. இந்நிலையில் 29 வயதான கோரி ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து இருக்கிறார். இளம் வயதிலேயே இவர் ஓய்வினை அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை தாண்டி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதற்கு சரியான காரணத்தையும் கூறியிருக்கிறார் கோரி ஆண்டர்சன். அதாவது அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை போன்ற டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு மூன்று வருடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த மூன்று வருடம் முடிந்த பின்னர் அமெரிக்கா சர்வதேச அணிக்காக விளையாடும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் கோரி ஆண்டர்சன்.

இது குறித்து பேசிய அவர் “நான் இந்த முடிவினை மிக எளிதாக எடுத்து விடவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் என்னுடைய காதலி அமெரிக்காவைச் சேர்ந்தவர். எனக்காக அவர் நியூசிலாந்திற்கு வந்து என்னுடன் வாழ்ந்து பல்வேறு தியாகங்களை செய்து இருக்கிறார். நான் அமெரிக்கா அணியில் விளையாட அதுபோதும்.
எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருக்கு கைமாறாக நான் ஏதாவது செய்ய வேண்டும். இதன் காரணமா அமெரிக்காவில் வாழ்ந்து அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் தான் ஓய்வினை அறிவித்ததாக” தெரிவித்திருக்கிறார் கோரி ஆண்டர்சன்.