Use your ← → (arrow) keys to browse
முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன்
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், மற்றொரு இறுதி போட்டியாளரை தீர்மானிக்கும் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான இறுதி போட்டி நாளை மாலை நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையேயான இந்த இறுதி போட்டியில், இரு அணிகளின் ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.
இந்திய அணி;
ஷிகர் தவான்;
இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து மாஸ் காட்டி வரும் தவான் நாளைய போட்டியிலும் அதிரடி காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Use your ← → (arrow) keys to browse