ஐபிஎல் தொடரில் ஆடுவதுதான் தற்போது ரோஹித் சர்மாவிற்கு முக்கியமா? முன்னாள் வீரர் திலீப் வெங்கசர்க்கார் சரமாரி கேள்வி! 1

ஐபிஎல் தொடரில் ஆடுவதுதான் தற்போது ரோஹித் சர்மாவிற்கு முக்கியமா? முன்னாள் வீரர் திலீப் வெங்கசர்க்கார் சரமாரி கேள்வி!

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறதே துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட இருக்கிறது 4 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இவை அனைத்தும் நடக்க இருக்கிறது

IPL 2020, DC vs MI: Rohit Sharma Will Not Feature in The Playoffs And  Remainder of The League

இதற்கான மூன்று விதமான அணியும் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து அன்னைக்கும் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே மூன்று விதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் ரோஹித் சர்மாவின் பெயர் ஒரு அணியில் கூட இடம்பெறவில்லை

இப்படி ரோகித் சர்மாவிற்கு காயம் இருந்தாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய தொடருக்கு தான் இல்லை என்று அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக வரை பயிற்சி மேற்கொண்டார். மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கினார். அப்படி அவர் களம் இறங்கினாலும் பெரிதாக ரன் அடிக்கவில்லை. காயம் சரியாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மீண்டும் வந்து ஐபிஎல் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ஆடுவதுதான் தற்போது ரோஹித் சர்மாவிற்கு முக்கியமா? முன்னாள் வீரர் திலீப் வெங்கசர்க்கார் சரமாரி கேள்வி! 2

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் திலீப் வெங்கசர்க்கார் பேசியதாவது…

ரோகித் சர்மாவின் விவகாரம் மிகவும் புதிராக இருக்கிறது. இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனான அவரது உடல் தகுதி சரியாக இல்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், அடுத்த சில நாட்களில் அவர் மும்பை அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

ரோஹித் சர்மாவிற்கு நாட்டைவிட ஐபிஎல் தொடர் தான் முக்கியமாக தெரிகிறது போலிருக்கிறது. இந்திய அணிக்காக ஆடும் அதைவிட ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை அவர் விரும்புகிறார். இந்த விஷயத்தில் வெகு சீக்கிரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *