டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடந்ததா? இல்லையா? - முழு அறிக்கையை வெளியிட்ட கமிட்டி 1

டிஎன்பிஎல் தொடரின் 4 வது சீசனில் சூதாட்டம் நடந்ததா? இல்லையா? என முழு அறிக்கையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கமிட்டி சமர்ப்பித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 4-வது சீசனில் அணியின் உரிமையாளர்களிடம் வெளிமாநிலத்தின் புக்கிஸ்கள் அணுகி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐக்கு புகார் வந்தது. மேலும் அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணியில் இருக்கும் முதல் தர கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும், மற்ற சில அணி வீரர்களும் இதில் பங்கெடுப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடந்ததா? இல்லையா? - முழு அறிக்கையை வெளியிட்ட கமிட்டி 2
Ravichandran Ashwin’s Dindigul Dragons 

இந்தப் புகார் நேரடியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு பார்வைக்கு சென்றது. இதனை தமிழக கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பி வைத்து விசாரிக்குமாறு பிசிசிஐ ஆணை பிறப்பித்தது. இதனடிப்படையில் தமிழக கிரிக்கெட் சங்கம் 3 பேர் கொண்ட கமிட்டியை நியமித்து இந்த சீசனில் பங்கேற்ற டிஎன்பிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் வீரர்களிடம் விசாரணை நடத்தியது.

டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடந்ததா? இல்லையா? - முழு அறிக்கையை வெளியிட்ட கமிட்டி 3

விசாரணை முடிந்த பிறகு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு 3 பேர் கொண்ட கமிட்டி முழு அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பிறகு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி வெளியிட்ட தகவலில், “டிஎன்பிஎல் தொடரில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என கமிட்டி அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையை நாங்கள் முழுமையாக படித்துவிட்டோம். அதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளோம். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நேர்மையான முறையில் நடைபெற்று வருவதாகவும் வீரர்களை எந்த உரிமையாளரும் முறைகேடான செயலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடந்ததா? இல்லையா? - முழு அறிக்கையை வெளியிட்ட கமிட்டி 4

முறைகேடான செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *