தனக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்த டேல் ஸ்டைன்; ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை !! 1

தனக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்த டேல் ஸ்டைன்; ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஸ்டெயின், ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இவர் தன்னுடன் விளையாடிய, எதிர்த்து விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இதில் தென்ஆப்பிரிக்க வீரர்களைத் தவிர குமார் சங்ககரா, பிரெட் லீ ஆகியோர் மட்டுமே எதிரணியைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

தனக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்த டேல் ஸ்டைன்; ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை !! 2

டேல் ஸ்டெயின் தேர்வு செய்துள்ள ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கிரேம் ஸ்மித், 2. குமார் சங்ககரா, 3. டேவ் ஹாகென், 4. கல்லீஸ், 5. ஜான்டி ரோட்ஸ், 6. குயிண்டன் டி காக், 7. பிரெட் பார்கியாச்சி, 8. பீட்டர் லம்பார்டு, 9. பிரெட் லீ, 10. பால் ஹாரிஸ், 11. ஆலன் டெனால்டு.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ‘‘ஸ்டெயின் அவருடன் பள்ளிக்கூடத்தில் விளையாடிய பார்ட்னர், சிறந்த நண்பர்கள், அவனுடைய கிளப் அணி கேப்டன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்’’ எனக்குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *