vk chewing gum during national anthem
Sri Lankan cricket captain Angelo Mathews (L) and Indian cricket captain Virat Kohli (2L) stand with teammates during the playing of national anthems before the start of the first day of the opening Test cricket match between Sri Lanka and India at The Galle International Cricket Stadium in Galle on August 12, 2015. AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

தேசிய கீதம் பாடப் போவதில்லை

இந்தியா இலங்கை இடயேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இருந்து போட்டி தொடங்கும் முன்னர் இரு நாட்டு அணிகளின் தேசிய கீதம் பாடப்படபோவதில்லை என இலங்கை அணியின் ஊடக செய்தி தொடர்பாளார் தினேஸ் ரத்னசிங்கம் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் நடக்கும் போட்டிகளில் ஒவ்வொரு தொடர் தொடங்கும் முண் இரு நாட்டு அணிகளின் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்  ஒரு நாள் போட்டியில் இரு நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. இதனால் அடுத்த 4 போட்டிகளுக்கு பாடப்படபோவதில்லை. அடுத்து ஒரே ஒரு டி20 போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம் பாடப்படும்.

தேசிய கீதம் அனைவரது நாட்டுப்பற்றை அவ்வப்போது வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு ஐசிசியின் சர்வதேச தொடரின் போதும் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம்.

இந்தியா இலங்கை இடையேனா இரண்டாவது போட்டி இன்று மதியம் 2 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் தொடர்ந்து முன்னிளை வகிக்க முன்னேரும். தொடர் தோல்விகளினால் துவண்டு போயிருக்கும் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *