பயம்னா என்னனே தெரியாத பேட்ஸ்மேன் இவர் தான்… நியூசிலாந்து இல்ல வேற யாராலையும் அவர கட்டுப்படுத்த முடியாது; ஆகாஷ் சோப்ரா அதிரடி பேச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதோடு, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவி வருவதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் அரையிறுதி போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்தும் அரையிறுதி போட்டி குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ரோஹித் சர்மா இந்திய அணி சிறப்பாக வழிநடத்தி வருவதோடு தனது பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி, பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவதாக பேட்டிங் செய்தாலும் சரி ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தேவையான தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்து வருகிறார். ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிவிட்டால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. ரோஹித் சர்மாவிற்கு எதிராக எப்படிப்பட்ட பீல்டிங் செட் செய்தாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது. ரோஹித் சர்மா சுயநலத்திற்காக விளையாடும் வீரர் இல்லை, அதே போன்று அவர் பயமே இல்லாமல் விளையாடும் சிறந்த பேட்ஸ்மேன்” என்று தெரிவித்தார்.