தோனி, கோஹ்லிக்கு இடம் இல்லை; தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 1

தோனி, கோஹ்லிக்கு இடம் இல்லை; தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்

இந்தியாவுக்காக 107 டெஸ்ட் போட்டிகள் ஆடிய ஹர்பஜன் சிங், 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இவர் தன்னுடன் ஆடிய, தன்னை எதிர்த்து ஆடிய வீரர்கள் பட்டியலிலிருந்து தன் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் தோனியை இவர் விக்கெட் கீப்பராகக் கூட சேர்க்கவில்லை, ஐபிஎல் ஆரம்பித்தால் சிஎஸ்கே விளம்பரத்துக்காக ‘பிராண்ட் தோனி’யைப் புகழ்ந்து தமிழில் ட்வீட்கள் போட்டு படுத்தி எடுப்பது வழக்கம் ஆனால் அவர் அணியில் தோனி இல்லை.

தோனி, கோஹ்லிக்கு இடம் இல்லை; தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 2

தொடக்க வீரர்களாக சேவாக், ஹெய்டனை தேர்ந்தெடுத்துள்ளார் ஹர்பஜன், இவர் அணியில் லாரா இல்லை. இந்தியாவில் ஸ்பின் பவுலிங்கைச் சிறப்பாக ஆடிய இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் இல்லை. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் பீட்டர்சன் இல்லை.

அனைத்திற்கும் மேலாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஸ்பின்னரான, ஹர்பஜனின் கூட்டாளியான அனில் கும்ப்ளே இல்லை. இவருடைய குருநாதராகக் கருதப்படும் உலகிலேயே 800 விக்கெட்டுகள் சிகரம் தொட்ட முரளிதரனும் இல்லை.

தோனி, கோஹ்லிக்கு இடம் இல்லை; தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 3
India Captain Virat Kohli gives a press conference one day ahead of the 1st T20i Cricket match between West Indies and India at Central Broward Regional Park Stadium in Fort Lauderdale, Florida, on August 2, 2019 (Photo by Randy Brooks / AFP) (Photo credit should read RANDY BROOKS/AFP via Getty Images)

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள சிறந்த ஆடும் லெவன் இங்கே;

சேவாக், ஹெய்டன், திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலீஸ், ரிக்கி பாண்டிங் (கேட்பன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஷான் போலக், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *