இந்த மனுஷன் தான் பெஸ்டு.. நான் எல்லாம் சும்மா; கே எல் ராகுல் சொல்வது இவரை தான்! 1

இந்திய அணிக்கு யார் வந்தாலும் போனாலும் இவர் ஒருவர்தான் எப்போதும் சிறந்தவர் அவரே. அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என மனம் திறந்து பேசியிருக்கிறார் கே எல் ராகுல்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக பல ஆண்டுகளாக சிறந்து விளங்கியவர் மகேந்திர சிங் தோனி. அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் அவரது இடத்தை நிரப்ப ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த பந்தயத்தில் கேஎல் ராகுல் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.

கே எல் ராகுல் கடந்த சில தொடர்களாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் ரிஷப் பண்ட் விளையாடி வந்தாலும், பண்ட் சற்று சொதப்பியதால் கே எல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனை ராகுல் சரியாக பயன்படுத்திக் கொண்டார். நம்பகத்தன்மையுடன் இருக்கிறார்.

இந்நிலையில் தான் தோனியின் இடத்தை நிரப்பி விட்டேனா? என்கிற கேள்விக்கு அவர் ராகுல் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், “தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு உதாரணமாக விளங்கி இருக்கிறார். அவரை போன்று நான் இருப்பேனா? என தெரியவில்லை. ஏனெனில் அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இருப்பினும் கீப்பிங் செய்துகொண்டு பந்துவீச்சாளர்களுக்கு எந்த அளவிற்கு என்னால் உதவ முடியுமோ? அதை நான் செய்து வருகிறேன். அதேநேரம் பேட்டிங் வரிசையில் அணிக்கு என்னால் முடிந்தவரை ரன் குவித்து வருகிறேன். ஆதலால் தோனியுடன் என்னை ஒப்பிடுவது போதுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர் உடன் ஒப்பிடுகையில் நான் சும்மா.” என பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் மூன்று வித போட்டிகளிலும் இடம் பெற்றுள்ள கேஎல் ராகுல், லிமிடெட் ஒவர் போட்டிகளில் ரோகித் சர்மா இல்லாததால் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ரோஹித் இடத்தில் துவக்க வீரராக களமிறங்க இருப்பதால் இவரின் பேட்டிங்கை எதிர்நோக்கி ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *