14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

டெல்லி அணியில் பல வீரரகள் ஒருசில காரணங்களால் அணியில் இணை முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு இங்கிலாந்து தொடரில் காயம் ஏற்பட்டதால் இந்த ஐபிஎல்லில் கலந்துக்கொள்ள முடியவில்லை.
இதனால் இளம் வீரர் பண்ட் அணியை தலைமை தாங்கி வருகிறார். டெல்லி ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா வீரர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ரபாடா குவாரன்டைனில் இருந்ததால் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை. இதில் ரபாடா அனைத்து கொரோனா டெஸ்டிலிலும் நெகட்டிவ் பெற்று இரண்டாவது போட்டியில் விளையாடினார்.
ஆனால் நார்ட்ஜேவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால் இரண்டாவது போட்டியில் விளையாடி முடியவில்லை. ஆனால் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்விட்டரில் மூன்று நெகட்டிவ் பெற்று அணியுடன் நார்ட்ஜே சேர்ந்துள்ளதாகவும், நார்ட்ஜேவுக்கு தவறான பாசிட்டிவ் முடிவு சொல்லியதாகவும் பதிவிட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் “இவர் எப்போ எங்களுடன் இருக்கிறார். தென்னாப்பிரிக்கா சூப்பர் ஸ்டார் நார்ட்ஜே தனிமைப்படுத்தலை முடித்துவிட்டார். கோவிட்19 தவறான முடிவுக்கு பிறகு, இவர் மூன்று முறை நெகட்டிவ் பெற்று இருக்கிறார். இவரை நாங்கள் களத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்” என்று டெல்லி பதிவிட்டுள்ளது.
He's here 💙
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2021
Our 🇿🇦 pace superstar is now out of quarantine. After a false positive result for COVID-19, Anrich Nortje tested negative thrice, and is now part of our team bubble.
We can't wait to see him in action 🔥#YehHaiNayiDilli #IPL2021 @AnrichNortje02 @TajMahalMumbai pic.twitter.com/8dGh2GlniK