ஜஸ்பிரிட் பும்ரா இல்லை! இந்த இருவர்தான் அதிக விக்கெட் வீழ்த்த போகின்றனர்! இர்பான் பதான் ஒப்பன் டாக்! 1

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடக்க இருக்கின்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டிரென்ட் போல்ட் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது என்று தற்போது கூறியிருக்கிறார்.

டிரென்ட் போல்ட் மற்றும் முகமது ஷமி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள்

இர்பான் பதான் கூறுகையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் மிக சிறப்பாக செயல்பட போகிறார்கள் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதே சமயம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி மிகப்பெரிய அளவில் நியூசிலாந்து அணியை திணற வைக்கப் போகிறது.

ஜஸ்பிரிட் பும்ரா இல்லை! இந்த இருவர்தான் அதிக விக்கெட் வீழ்த்த போகின்றனர்! இர்பான் பதான் ஒப்பன் டாக்! 2

இருப்பினும் அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற கூடிய இரண்டு வீரர்கள் யார் என்று பார்த்தால் அது நிச்சயமாக முகமது ஷமி மற்றும் டிரென்ட் போல்ட் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற கூடிய போட்டி காத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

முகமது ஷமி இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுப்பார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 13 போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக 11 போட்டிகளில் 36 விக்கெட்டுகள் இஷாந்த் சர்மா கைப்பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் முகமது சமி 9 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பின்னர் நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாட ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

ஜஸ்பிரிட் பும்ரா இல்லை! இந்த இருவர்தான் அதிக விக்கெட் வீழ்த்த போகின்றனர்! இர்பான் பதான் ஒப்பன் டாக்! 3

அப்பொழுது சில மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு அவர் மீண்டும் விளையாட வருகையில் தன்னுடைய முழு திறமையை காண்பிக்க அவர் தவற மாட்டார். எனவே முகமது ஷமி இந்திய அணிக்காக முக்கிய வீரராக செயல்பட்டு பல விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று இர்பான் பதான் இறுதியாக கூறி முடித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரத்தில் 3:30 மணி அளவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *