இந்திய அணியின் வெற்றிக்கு கோஹ்லி மட்டும் காரணமல்ல; ரவி சாஸ்திரி !! 1
இந்திய அணியின் வெற்றிக்கு கோஹ்லி மட்டும் காரணமல்ல; ரவி சாஸ்திரி

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு கோஹ்லி மட்டுமே காரணமல்ல என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு கோஹ்லி மட்டும் காரணமல்ல; ரவி சாஸ்திரி !! 2

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது.

 

இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தென் ஆப்ரிக்கா  அணிக்கு எதிரான ஒவ்வொரு வெற்றியிலும் இந்திய பந்துவீச்சாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்கு கோஹ்லி மட்டும் காரணமல்ல; ரவி சாஸ்திரி !! 3

இது குறித்து கங்குலி கூறியதாவது “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்கு கோலி மட்டும் காரணமல்லை. திறமையான பந்துவீச்சாளர்களின் செயல்பாடு தான் காரணம்” என்று கூறியுள்ளார். அத்துடன் குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்குமார் போன்ற இளம் பந்துவீச்சளார்கள் எதிர்பாராத நேரத்தில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டத்தின் போக்கை, வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றதாகவும்” ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *