அவ்வளவு சுலபமாக இவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விட முடியாது – பிரவீன் அம்ரே
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரவீன் பிரித்திவி ஷா ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவ்வளவு எளிதில் அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாடி விட முடியாது என்றும் கூறியுள்ளார்
சென்ற ஆண்டு விட்டதை இந்த ஆண்டு மீண்டும் பிடித்த பிருத்திவி
சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சரி இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் சரி மிக மோசமாகப் பிரித்வி விளையாடினார் அதன் காரணமாக இந்திய அணி அவரை கைவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாட போவதாக பிரித்வி விஜய் ஹசாரே டிராபி தொடங்குவதற்கு முன்பாக கூறியிருந்தார்.
தொடர் நடைபெறுவதற்கு முன்பாக கூறியது போலவே விஜய் ஹசாரே டிராபி தொடரில் தனது அணிக்காக மிக அற்புதமாக விளையாடி மொத்தமாக 7 போட்டிகளில் 827 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அந்த தொடரில் அவரது அவெரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 165 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதை தொடர்ந்து தற்போது பாதையில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் மொத்தமாக 8 போட்டிகளில் 308 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் இவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 166.5 என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும்
இந்த இரண்டு மட்டும் அவருக்கு பத்தாது மீண்டும் எப்பொழுது அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் மிக சிறப்பாக விளையாடினால் தான் மீண்டும் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்று பிரவீன் கூறியுள்ளார். சென்ற ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், எப்பொழுது எங்கு விளையாடினாலும் ரன் குவிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி இருந்தார். அதனை தனது மனதில் வைத்து இந்த ஆண்டு துவக்கம் முதல் எல்லா போட்டிகளும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆனால் இது நிச்சயமாக பத்தாது இன்னும் உள்ளூர் போட்டிகளில் அவர் மிக சிறப்பாக விளையாட வேண்டும். குறிப்பாக தொடர்ச்சியாக அவர் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்படி கொடுத்தால் மட்டும் தான் அவருக்கான இடம் இந்திய அணியில் மீண்டும் வழங்கப்படும் என்று இறுதியாக கூறி முடித்தார்.
இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஷா நிச்சயமாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் பிசிசிஐ அவரை இலங்கைக்கு எதிரான தொடரில் தேர்ந்தெடுக்க போகிறது என்று செய்திகள் வந்துள்ளன. எனவே மீண்டும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஷா தன்னுடைய திறமையை நிரூபித்தால், உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு இந்த ஆண்டு இறுதியில் அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.