எனக்கு டெஸ்ட் கேப்டசின்ஷிப் வேணா, ஆனா குடுத்தா நல்லா இருக்கும்; கேஎல் ராகுல் பேட்டி! 1

டெஸ்ட் கேப்டனாக வேண்டும் என்று எண்ணம் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பொறுப்பு வகிப்பேன் என மனம் திறந்து பேசியிருக்கிறார் கே எல் ராகுல்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்த விராட் கோலி, தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பிறகு, திடீரென தனது சமூக வலைத்தளத்தில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாகவும், பிசிசிஐ-க்கு நன்றி என்றும் உருக்கமான பதிவு செய்திருந்தார்.

எனக்கு டெஸ்ட் கேப்டசின்ஷிப் வேணா, ஆனா குடுத்தா நல்லா இருக்கும்; கேஎல் ராகுல் பேட்டி! 2

தென்ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரின் தோல்வியிலிருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்கு முன்னதாக, விராட் கோலி இப்படி அறிவித்தது பேரதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து தற்காலிக துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து விதங்களிலும சிறந்த கேப்டனாக விராட் கோலி இருந்திருக்கிறார். இத்தகைய சிறப்பான பங்களிப்பை கொடுத்தவருக்கு வெறும் நன்றி மட்டும் கூறுவது போதுமானதாக இருக்காது.” என பதிவிட்டிருந்தார்.

ஒருநாள் தொடரின் போது ரோகித் சர்மா இடம்பெறாததால் கேஎல் ராகுல் கேப்டனாக வழிநடத்துகிறார். மேலும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விராட்கோலி விலகியதால் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா அல்லது கேஎல் ராகுல் இருவரில் ஒருவர்தான் நிச்சயம் இருப்பார் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு டெஸ்ட் கேப்டசின்ஷிப் வேணா, ஆனா குடுத்தா நல்லா இருக்கும்; கேஎல் ராகுல் பேட்டி! 3

இது குறித்து நேரடியாக அவர்களிடம் கேட்டபோது, “இதற்கு முன்பு வரை அப்படி ஒரு எண்ணம் இல்லை. இனியும் இல்லை. ஆனால் அணி நிர்வாகம் எனக்கு அந்த பொறுப்பை கொடுத்தால் நிச்சயம் எந்தவித தயக்கமுமின்றி வழி நடத்துவேன். பத்திரிக்கை செய்திகளில் எனது பெயரை பார்த்த பிறகுதான் எனக்கு அப்படி ஒரு எண்ணமே வந்தது. அதுவரை டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து செயல்பட வேண்டும் என்று எண்ணம் இல்லை. ஏனெனில் விராட்கோலி அத்தகைய சிறப்பான செயல்பட்டை வெளிப்படுத்தி வருகிறார்.”

எனக்கு டெஸ்ட் கேப்டசின்ஷிப் வேணா, ஆனா குடுத்தா நல்லா இருக்கும்; கேஎல் ராகுல் பேட்டி! 4

“ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தற்காலிகமாக இருந்தாலும் இதனை தலையாய பொறுப்பாக கருத்தில் கொண்டு, எனது முழு பங்களிப்பை கொடுப்பேன். டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பதவி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தியது இன்னும் மகிழ்ச்சி அளித்தது. துரதிஸ்டவசமாக எதிர்பார்த்த முடிவுகள் அமைய வில்லை. ஆனாலும் யாரும் கொடுத்து விடாதே மிகப்பெரிய அனுபவமாக எனக்கு இருந்தது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *