அத பத்தி கொஞ்சம் கூட கவலப்படல; சூர்யகுமார் யாதவ் பெருந்தன்மை !! 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் நியாயமே இல்லாமல் அவுட் வழங்கியது குறித்து தான் சிறிதும் கவலைப்படவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.

அத பத்தி கொஞ்சம் கூட கவலப்படல; சூர்யகுமார் யாதவ் பெருந்தன்மை !! 2

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

கே.எல் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சொதப்பி போதிலும் இந்திய அணி 180+ ரன்கள் வரை செல்வதற்கு சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் தான் காரணம். தனக்கு வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே சிக்ஸருடன் தனது ஆட்டத்தை துவங்கிய சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் குவித்திருந்த போது, சாம் கர்ரான் பந்தில், டேவிட் மாலனிடம் தரையோடு தரையாக உரசி பிடித்த கேட்ச் அவுட்டா இல்லையா என்பது தெளிவாக தெரியாத போதிலும் அம்பயரின் முடிவால் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது.

அத பத்தி கொஞ்சம் கூட கவலப்படல; சூர்யகுமார் யாதவ் பெருந்தன்மை !! 3

வாய்ப்பு கிடைத்த தனது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவிற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருவதை போன்றே, தேவையே இல்லாமல் அவுட் கொடுத்த அம்ப்யரின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் சூர்யகுமார் யாதவிற்கு தேவை இல்லாமல் கொடுக்கப்பட்ட அவுட் குறித்து வருத்தமடைந்த நிலையில், இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவோ அதை பற்றி தான் சிறிதும் கவலைப்படவில்லை என பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

அத பத்தி கொஞ்சம் கூட கவலப்படல; சூர்யகுமார் யாதவ் பெருந்தன்மை !! 4

இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “நான் அவுட்டான முறை குறித்து நான் சிறிதும் கவலைப்படவில்லை. அது எனது கையில் இல்லை, எனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விசயம் குறித்து நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். எனது கட்டுப்பாட்டில் உள்ள விசயங்களை சரியாக எப்படி செய்வது என்பது குறித்து தான் நான் அதிகம் யோசிப்பேன். எனது ஆட்டத்திலும், ஆரோக்கியத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த நான் அதிகம் சிரமப்பட்டுள்ளேன். எனக்கான வாய்ப்பு வரும் பொழுது அதை கெட்டியாக பிடித்து கொள்ளவே இத்தனை நாளும் கடுமையாக உழைத்து வந்தேன். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் எனது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தவே விரும்புவேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *