தோனி, கங்குலி இல்லை; இந்த இந்திய வீரர் தான் எப்பவும் மாஸ்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !! 1

தோனி, கங்குலி இல்லை; இந்த இந்திய வீரர் தான் எப்பவும் மாஸ்; ஹர்பஜன் சிங் சொல்கிறார்

இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே தான் சிறந்த மேட்ச் வின்னர் என ஹர்பஜன் சிங் ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியானது எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பேட்டிங் அணியாக திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் பவுலிங்கை விட எப்போதுமே பேட்டிங் தான் சிறப்பாக இருந்துள்ளது. சச்சின் , கங்குலி, டிராவிட், லட்சுமணன், யுவராஜ்என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி, இப்போது ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. இதற்கிடையே, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களும் இருந்துள்ளனர்.

தோனி, கங்குலி இல்லை; இந்த இந்திய வீரர் தான் எப்பவும் மாஸ்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !! 2

ஆனால் எத்தனையோ தலைசிறந்த பேட்ஸ்மேன்களை பெற்றிருந்தாலும், பவுலர்களின் உதவியில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் வெல்ல முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஒரு அணியால் டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க முடியும். இப்போதைய இந்திய அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது தான் காரணம்.

அந்தவகையில், இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் சச்சினோ, டிராவிட்டோ இல்லை என்பதும் அனில் கும்ப்ளே தான் இந்தியாவின் தலைசிறந்த மேட்ச் வின்னர் என்பதும் ஹர்பஜன் சிங்கின் கருத்து.

தோனி, கங்குலி இல்லை; இந்த இந்திய வீரர் தான் எப்பவும் மாஸ்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !! 3

அனில் கும்ப்ளே குறித்து ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். அனில் கும்ப்ளே குறித்து பேசிய ஹர்பஜன் சிங், என்னை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் அனில் கும்ப்ளே தான். இந்தியாவிற்காக ஆடியதிலேயே மிகச்சிறந்த வீரரும் அவர் தான். அவரது பந்து சுழன்று திரும்பாது என்று பலர் விமர்சித்திருக்கிறார்கள். பந்தை சுழற்றி திருப்பாவிட்டாலும், பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியும் என்பதை செய்துகாட்டியவர் அனில் கும்ப்ளே.

அவருடன் இணைந்து நிறைய ஆண்டுகள் ஆடியது எனது அதிர்ஷ்டம். மிகுந்த அர்ப்பணிப்பான வீரர் அனில் கும்ப்ளே என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *