நான் இத சொல்வேனு யாரும் எதிர்பார்க்கலேல... சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த அணி தான்... அது இந்தியா இல்லை; பென் ஸ்டோக்ஸ் கணிப்பு !! 1
நான் இத சொல்வேனு யாரும் எதிர்பார்க்கலேல… சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த அணி தான்… அது இந்தியா இல்லை; பென் ஸ்டோக்ஸ் கணிப்பு

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கருத்தை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

நான் இத சொல்வேனு யாரும் எதிர்பார்க்கலேல... சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த அணி தான்... அது இந்தியா இல்லை; பென் ஸ்டோக்ஸ் கணிப்பு !! 2

மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட இந்த அணிகள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியோ இந்த தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.

நான் இத சொல்வேனு யாரும் எதிர்பார்க்கலேல... சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த அணி தான்... அது இந்தியா இல்லை; பென் ஸ்டோக்ஸ் கணிப்பு !! 3

இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் படுதோல்விகள் குறித்தும், நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில் , “என்னை பொறுத்தவரையில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *