இந்தியாவின் அடுத்த தோனி இவர்தான் விராட் கோலியோ, ரிஷப் பண்ட்டோ இல்லை! சுரேஷ் ரெய்னா தடாலடி பேச்சு!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. ஓய்வு பெறும் தருணத்தில் இருக்கிறார். இவர் ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய இடத்தை நிரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக வேலை செய்து வருகிறது.
அவர் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அணியில் இருக்கும் போது மூன்று பேருக்கான வேலையை சேர்த்து செய்தார் தோனி. ஒரு விக்கெட் கீப்பர் ஒரு கேப்டன் மற்றும் ஒரு மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் இப்படி மூன்று பேருடைய வேலையை ஒரே வீரராக செய்த அவரது இடத்தை நிரப்ப வேண்டுமானால் ஒரு அதி திறமை வாய்ந்த வீரர் இந்திய அணியில் தேவை.
ரிஷப் பந்த், கே எல் ராகுல், சஞ்சு சாம்சன், விருத்திமான் சஹா என பலரும் இதற்காக பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் பெரிதாக யாரும் தோனியை நிரப்பிவிடவில்லை. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அடுத்த தோனி யார் என்பது பற்றி பேசியுள்ளார். குறிப்பாக தோனி போல் அடுத்து யார் கேப்டனாக வருவார்கள் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி ரோகித் சர்மா தான். அவரை நான் பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமைதியாக, அனைத்தையும் பார்க்கிறார், கேட்கிறார், வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். அணியை முன்னால் நின்று வழி நடத்துகிறார் .
இதைத்தான் தோனியும் செய்தார். அணியில் ஒவ்வொருவரும் கேப்டன் தான் என்று நினைக்கிறார் ரோஹித் சர்மா. இதனை நான் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது பார்த்தேன். வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு அவர் நம்பிக்கை கொடுத்ததையும் பார்த்தேன். அவர்தான் அடுத்த தோனியாக வருவார் என்று கூறுகிறார் சுரேஷ் ரெய்னா