அவரு இருக்கப்போ என்ன தூக்கி வச்சி பேசாதீங்க.. ப்ளீஸ்: நெகிழ்ச்சியாக பேசிய ரஹானே! 1

தன்னைவிட விராட் கோலி சிறந்தவர். நான் இப்போதும் அவருக்கு துணை கேப்டன் தான் என நெகிழ்ச்சியாக பதிலளித்திருக்கிறார் அஜிங்கியா ரஹானே.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு சொந்த காரணத்திற்காக விராட்கோலி இந்தியா திரும்பிவிட்டார். மீதமுள்ள போட்டிகளில் ரஹானே கேப்டன் பொறுப்பை வகித்தார். கோஹ்லி இல்லாத காரணத்தினால் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பல விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ரகானே தலைமையிலான அணி 2-1 என்ற கணக்கில் தொடரை மீண்டும் கைப்பற்றியது. இதனால் கோஹ்லியின் கேப்டன் பொறுப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.

அவரு இருக்கப்போ என்ன தூக்கி வச்சி பேசாதீங்க.. ப்ளீஸ்: நெகிழ்ச்சியாக பேசிய ரஹானே! 2

இந்நிலையில் இதற்கு நிதானமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிலளித்திருக்கிறார் ரஹானே. அவர் கூறுகையில், “கோஹ்லி தான் எப்போதும் டெஸ்ட் கேப்டனாக இருப்பார். நான் துணைகேப்டன் மட்டுமே அவர் இல்லாதப்பொழுது அணியை நன்கு வழி நடத்துவது எனது கடமை. அதை நான் சரியாக செய்திருக்கிறேன். அதற்காக விராட் கோலியை விட நான் சிறந்தவன் என்கிற வாதத்திற்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை.

இப்போது செயல்படுவதைப் போல எதிர்காலத்திலும் எனது தலைமையிலான அணியை வெற்றிக்காக வழி நடத்துவேன். விராட் கோலியும் அதையே விரும்புவார். எங்களுக்கிடையில் நல்ல உறவு நீடித்து வருகிறது. என்னை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இருவரும் இணைந்து செயல்படும் பொழுது அணியின் வெற்றியை எத்தகையதாக இருக்கும் என கணிப்போம்.

அவரு இருக்கப்போ என்ன தூக்கி வச்சி பேசாதீங்க.. ப்ளீஸ்: நெகிழ்ச்சியாக பேசிய ரஹானே! 3

கேப்டன் பொறுப்பை பொருத்தவரை அவர் என்னைவிட நன்கு கூர்மையாக திட்டங்கள் வகுத்து செயல்படக்கூடியவர். சுழல் பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் என்னுடன் ஆலோசனை நடத்துவார். தற்போதுவரை டெஸ்ட் அணியில் நிலைத்திருப்பதை நான் குறைவாக எண்ணவில்லை. ஆனாலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நன்கு பயிற்சி செய்து வருகிறேன். மீண்டும் எனது இடத்தை லிமிடெட்ஓவர் போட்டிகளில் பிடிக்க காத்திருக்கிறேன்.” என்றார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *